sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குறைகேட்பு கூட்டத்தில் விவசாய பிரச்னைகளை மட்டும் பேசலாமே! திருப்பூர் ஆர்.டி.ஓ. அட்வைஸ்

/

குறைகேட்பு கூட்டத்தில் விவசாய பிரச்னைகளை மட்டும் பேசலாமே! திருப்பூர் ஆர்.டி.ஓ. அட்வைஸ்

குறைகேட்பு கூட்டத்தில் விவசாய பிரச்னைகளை மட்டும் பேசலாமே! திருப்பூர் ஆர்.டி.ஓ. அட்வைஸ்

குறைகேட்பு கூட்டத்தில் விவசாய பிரச்னைகளை மட்டும் பேசலாமே! திருப்பூர் ஆர்.டி.ஓ. அட்வைஸ்


ADDED : செப் 30, 2025 11:55 PM

Google News

ADDED : செப் 30, 2025 11:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; குறைகேட்பு கூட்டத்தில், விவசாயம் சார்ந்த பிரச்னைகளை மட்டும் பேசவேண்டும் என, விவசாயிகளுக்கும்; மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணவேண்டும் என, அதிகாரிகளுக்கும் திருப்பூர் ஆர்.டி.ஓ., அறிவுரை கூறினார்.

திருப்பூர் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், குமரன் ரோட்டிலுள்ள ஆர்.டி.ஓ. அலுவலக அரங்கில் நேற்று நடைபெற்றது. புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆர்.டி.ஓ. சிவபிரகாஷ் தலைமை வகித்தார்.

திருப்பூர் வடக்கு, தெற்கு, பல்லடம், அவிநாசி, ஊத்துக்குளி ஆகிய ஐந்து தாலுகாக்களை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்கத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்று மனு அளித்தனர்; பிரச்னைகளை சுட்டிக்காட்டி பேசினர்.

ஐந்து தாலுகா தாசில்தார்கள் மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர். முந்தைய குறைகேட்பு கூட்டத்தில் அளிக்கப்பட்ட மனுக்கள், அம்மனுக்கள் மீது துறை சார்ந்த அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து, துணை தாசில்தார் சிவசக்தி தெரிவித்தார்.

அலுவலர்கள் சிலர், மனுதாரர்களுக்கு எவ்வித பதிலும் அளிக்கவில்லை. இதனால், ஆர்.டி.ஓ. சிவப்பிரகாஷ், 'குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் அளிக்கும் மனுக்கள் மீது, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த குறைகேட்பு கூட்டத்துக்குள், மனுதாரருக்கு, எழுத்துப்பூர்வ பதில் அளிக்க வேண்டும்' என்றார்.

சிலர், விவசாய பிரச்னைகள் மட்டுமின்றி தொடர்ந்து பொதுவான பிரச்னைகளை குறிப்பிட்டு பேசினர். அதனை கவனித்து, ஆர்.டி.ஓ. பேசுகையில், 'விவசாயிகளின் பிரச்னைகளை கேட்டறிந்து, தீர்வு காண்பதற்காகவே இந்த குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு, விவசாயம் சார்ந்த குறைகள், பிரச்னைகளை மட்டும் பேசுங்கள்.

அப்போதுதான், விவசாயிகளின் பிரச்னைகள் என்னென்ன என்பதை கண்டறிந்து, அவற்றுக்கு உரிய காலத்தில் தீர்வு காணமுடியும். சிலர், மாவட்ட அளவிலான பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் அளித்த, பொது பிரச்னை கள் சார்ந்த அதே மனுவையே, கோட்ட அளவிலான குறைகேட்பு கூட்டத்தில் அளிக்கின்றனர்.

பொது பிரச்னைகளை, என்னை தனியாக அணுகி தெரிவியுங்கள்; விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தை, முழுமையாக விவசாயிகள் குறைகளை தெரிவிக்கும் கூட்டமாக நடத்த விடுங்கள்,' என்றார்.

ஆர்.டி.ஓ. டென்ஷன்; அதிகாரிகள் சமரசம்


'நஞ்சராயன் குளத்திலிருந்து உபரிநீர் செல்லும் வாய்க்காலில் தடுப்பணை ஷட்டர் உடைக்கப்பட்டது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; எங்கள் மனுக்கள் மீது அதிகாரிகள் உரிய தீர்வு காண்பதில்லை. எல்லாமே விவசாயம் சார்ந்த பிரச்னைகள்தானே' என, சமூக ஆர்வலர் கிருஷ்ணசாமி ஆக்ரோஷமாக பேசினார்.

அவரை, ஆர்.டி.ஓ. சமாதானப்படுத்த முயற்சித்தார். ஆனால், ஆர்.டி.ஓ.வை பேசவிடாமல், கிருஷ்ணசாமி தொடர்ந்து ஆவேசமாக பேசிக்கொண்டிருந்தார். இதனால், டென்ஷனானஆர்.டி.ஓ. 'உங்கள் மொத்த ஆதங்கத்தையும் இங்கே கொட்டுகிறீர்கள். சுமூகமாக நடைபெற்று கொண்டிருக்கும் விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் பிரச்னையை உருவாக்கவேண்டும் என நினைத்தால், நீங்கள் அதை செய்யுங்கள். இதற்கு செவிசாய்த்து நானும் கேட்டுக்கொண்டிருக்கிறேன்,' என்றார்.

தொடர்ந்து அரசு அலுவலர்களிடம், 'குறைகேட்பு கூட்டத்தில் அளிக்கப்படும் மனுக்கள் மீது முழுமையாக விசாரணை நடத்தி, தீர்வு காணுங்கள். ஏதோ பிரச்னைகள் இருப்பதாலேயே, இதுபோன்று பேசுகின்றனர்,' என, அறிவுறுத்தினார்.






      Dinamalar
      Follow us