/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விண்வெளியை ஆள்வோம்: இன்று தேசிய விண்வெளி நாள்
/
விண்வெளியை ஆள்வோம்: இன்று தேசிய விண்வெளி நாள்
ADDED : ஆக 22, 2025 11:54 PM
2008 அக்., 22-: ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து 'சந்திரயான் 1' விண்கலம் ஏவப்பட்டது. இது நிலவை 312 நாட்கள் சுற்றியது. நிலவில் தண்ணீர் இருந்ததற்கான தடயங்களை விண்கலம் கண்டுபிடித்தது.
2019 ஜூலை 22: சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. 2019 செப்., 8-ம் தேதி அந்த விண்கலம் நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிலவில் மோதி விபத்துக்குள்ளானது. லேண்டர், ரோவர் சேதமடைந்தன. எனினும் ஆர்பிட்டர் நிலவை சுற்றி வட்டமடித்து ஆய்வு செய்தது.
2023 ஜூலை 14: 'சந்திரயான் 3' விண்கலம் செலுத்தப்பட்டது. 2023- ஆக., 23-ம் தேதி நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.
தமிழர்கள்: சந்திரயான் 1, 2, 3 திட்டங்களுக்கு முறையே திட்ட இயக்குனர்களாக தமிழகத்தைச் சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை, வனிதா முத்தையா, வீரமுத்துவேல் ஆகியோர் பணியாற்றினர்.
தேசிய விண்வெளி நாள் இன்று: நிலவில் சந்திராயன் விண்கலம் தரை யிறங்கிய ஆக., 23ஐ தேசிய விண்வெளி தினமாக பிரதமர் மோடி அறிவித்தார்.