/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கடிதம் எழுதும் போட்டி பொதுமக்களுக்கு அழைப்பு
/
கடிதம் எழுதும் போட்டி பொதுமக்களுக்கு அழைப்பு
ADDED : செப் 28, 2025 08:07 AM
திருப்பூர், : திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமன் அறிக்கை:
இந்திய அஞ்சல் துறை சார்பில், தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி, வரும், டிச., 6ம் தேதி வரை நடத்தப்படுகிறது. போட்டியில் அனைத்து வயதினரும் வரவேற்கப்படுகின்றனர். போட்டிக்கான கடிதத்தை 'என் முன் மாதிரிக்கு எழுதும் கடிதம்' என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி அல்லது ஏதேனும் ஒரு வட்டார மொழியில் கடிதம் எழுதி, வரும், டிச., 8 ம் தேதிக்குள், 'முதன்மை அஞ்சல் துறை தலைவர், தமிழ்நாடு, சென்னை' என்ற முகவரிக்கு, திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் வாயிலாக அனுப்பி வைக்க வேண்டும். கையால் எழுதப்பட்ட கடிதமாக இருக்க வேண்டும்.
இன்லாண்ட் லெட்டர் கார்டில், 500 வார்த்தைகளுக்கு மிகாலும், கடித உறை பிரிவில் எழுதுவோர், 1,000 வார்த்தைகளுக்கு மிகாமலும் கைப்பட எழுதி தபாலில் அனுப்பி வைக்க வேண்டும். போட்டியில் வெற்றி பெறுவோர், 18 வயதுக்கு உட்பட்ட மற்றும் பூர்த்தியடைந்தவர்களுக்கு, வட்ட அளவில் முதல் பரிசாக, 25 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக, 10 ஆயிரம் ரூபாய், 3ம் பரிசாக, 5,000 ரூபாய் வழங்கப்படும். தேசிய அளவில் முதல் பரிசு, 50 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசு, 25 ஆயிரம் ரூபாய், 3ம் பரிசு, 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். பொதுமக்கள், மாணவ, மாணவியர் என அனைவரும் இப்போட்டியில் பங்கு பெறலாம். மேலும், விவரங்களுக்கு அருகில் உள்ள தபால் நிலையங்களை அணுகலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.