/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளி மாணவர்களுக்கு நுாலக உறுப்பினர் சேர்க்கை
/
பள்ளி மாணவர்களுக்கு நுாலக உறுப்பினர் சேர்க்கை
ADDED : செப் 18, 2025 10:04 PM
உடுமலை; ஆர்.கிருஷ்ணாபுரம் ஊர்ப்புற நுாலத்தில், பள்ளி மாணவர்கள் நுாலக உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர்.
ராகல்பாவி ஊராட்சியில் உள்ள ஆர்.கிருஷ்ணாபுரம் நுாலகத்தில், பூலாங்கிணர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள், 75 பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.
மாணவர்களின் வாசிப்புத்திறனை மேம்படுத்தவும், நுாலக பயன்பாட்டை அதிகரிக்கவும், நுாலக வாசகர் வட்டத்தலைவர் தேவராஜ், மாணவர்களுக்கான உறுப்பினர் சேர்க்கை காப்பு மற்றும் ஆண்டு சந்தா தொகையை நன்கொடையாக வழங்கினார்.
மாணவர்களுக்கு நுாலக உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. தொடர்ந்து அந்நுாலகத்தில் அதிகமான புத்தகங்களை வாசிக்கும் மாணவர்களுக்கு, மாவட்ட நுாலகத்துறையின் சார்பில் பாராட்டுச்சான்றிதழ் மற்றும் பரிசுகளும் வழங்கப்படுமென, நுாலக வாசகர் வட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், நுாலக வாசகர் வட்டத்தினர் பங்கேற்றனர்.