/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பட்டாசு கடை அமைக்க உரிமம்; விண்ணப்பிக்க அக்., 10 கடைசி நாள்
/
பட்டாசு கடை அமைக்க உரிமம்; விண்ணப்பிக்க அக்., 10 கடைசி நாள்
பட்டாசு கடை அமைக்க உரிமம்; விண்ணப்பிக்க அக்., 10 கடைசி நாள்
பட்டாசு கடை அமைக்க உரிமம்; விண்ணப்பிக்க அக்., 10 கடைசி நாள்
ADDED : செப் 11, 2025 10:22 PM
திருப்பூர்; திருப்பூர் மாவட்ட ஊரக பகுதிகளில் பட்டாசு கடை அமைப்பதற்கான உரிமம் பெற வரும் அக்., 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
வரும் அக்., 20ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பண்டிகைக்கு இன்னும் 38 நாட்களே உள்ளன. தீபாவளி கொண்டாட்டத்தில், பட்டாசுகள் முக்கிய பங்குவகிக்கின்றன. விதவிதமான பட்டாசு, மத்தாப்பு ரகங்களை வெடித்து, மக்கள் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். தீபாவளி நெருங்கும் நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் பட்டாசு ரகங்கள் விற்பனை கடைகள் அமைக்க வர்த்தகர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், பட்டாசு கடை நடத்த விரும்புவோர், தற்காலிக உரிமம் பெறுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து கலெக்டர் மனீஷ் நாரணவரே அறிக்கை:
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் மாநகர போலீஸ் எல்லை கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகள் தவிர, ஊரக பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடை நடத்துவதற்கான உரிமம் கோரி, மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பிக்கலாம். உரிய ஆவணங்களுடன், வரும் அக்டோபர் 10ம் தேதிக்கு முன்னதாக விண்ணப்பிக்கவேண்டும். பட்டாசு கடை அமையும் மனை வரைபடம், கடை அமையும் இடத்தின் வரைபடம், இடத்தின் பட்டா மற்றும் ஆவணங்கள்; தற்காலிக பட்டாசு கடைக்கான உரிம கட்டணம் 600 ரூபாயை, (HOD Code: 02301, DDO Code: 32010004, Head Of Account: 007060103AA22799) www.karuvoolam.tn.gov.in/chellan/echellan என்கிற இணையதளத்தில், செலுத்தியதற்கான ரசீது இணைக்கவேண்டும்.
பட்டாசு கடை அமைப்பவரே கடை அமையும் இடத்தின் உரிமையாளர் எனில், அதற்கான ஆவணங்கள் மற்றும் நடப்பு நிதியாண்டில் சொத்துவரி செலுத்தியதற்கான ரசீது நகல்; வாடகை கட்டடம் எனில், வரி செலுத்திய ரசீது மற்றும் உரிமையாளரிடமிருந்து 20 ரூபாய் முத்திரை தாளில் பெறப்பட்ட ஒப்பந்த பத்திரம்; விண்ணப்பதாரரின் புகைப்படம் மற்றும் முகவரி சான்று, தீயணைப்பான் சான்று ஆகியவற்றுடன் இ- சேவை மையங்களில் விண்ணப்பிக்கவேண்டும். அக்டோபர் 10ம் தேதிக்குப்பின் வரும் உரிமைகோரும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.
இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.