/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முதியோர்கள் தங்குவதற்காக லயன்ஸ் ஹேப்பி ஹோம்
/
முதியோர்கள் தங்குவதற்காக லயன்ஸ் ஹேப்பி ஹோம்
ADDED : டிச 06, 2025 05:41 AM

அனுப்பர்பாளையம்: மாவட்ட அனைத்து லயன்ஸ் கிளப் சார்பில், திருப்பூர் ஹேப்பி ஹோம் அறக்கட்டளை என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளனர். இதன் சார்பில், கருவலுாரில், முதியோர்களுக்கான லயன்ஸ் ஹேப்பி ஹோம் கட்டப்பட்டு வருகிறது.
இது ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் 6.5 கோடி ரூபாய் மதிப்பில் 150க்கும் மேற்பட்ட முதியவர்கள் தங்கும் வகையில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது.
ஹேப்பி ஹோமில் வாயில் நிலவு நிறுவுவதற்கான பூஜை நடந்தது. லயன்ஸ் கிளப் மாவட்ட கவர்னர் ராஜசேகர், துணை கவர்னர்கள் செல்வராஜ், சூரிய நந்தகோபால், உடனடி முன்னாள் கவர்னர் நித்தியானந்தம், முன்னாள் இன்டர்நேஷனல் டைரக்டர் மதன கோபால் ஆகியோர் கலந்து கொண்டு பூஜையை தொடங்கி வைத்தனர்.
ஏற்பாடுகளை அறக்கட்டளை தலைவர் ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. மயில்சாமி, செயலாளர் ஜெயசேகரன், துணை தலைவர்கள் மெஜஸ்டிக் கந்தசாமி, கோவிந்தராஜ் ஆகியோர் செய்து இருந்தனர்.

