/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நெரிசலில் சிக்கிய முருகப்பெருமான் சப்பரம்
/
நெரிசலில் சிக்கிய முருகப்பெருமான் சப்பரம்
ADDED : அக் 28, 2025 12:19 AM

திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், சண்முக சுப்பிரமணியரின் சூரசம்ஹார நிகழ்ச்சி நேற்று நடந்தது. சுப்பிரமணியர், வீர பாகு தனி சப்பரங்களில் எழுந்தருளி, சூரனை வதம் செய்தனர்.
அரிசிக்கடை வீதி, காமராஜர் ரோடு சந்திப்பில், பாணுகோபன் தலையை கொய்த பிறகு, சுப்பிரமணியர் சப்பரம், சந்திப்பு பகுதியில் நின்றது. சூரனின் சப்பரம் பூமார்க்கெட் அருகே சென்றது. சுவாமி திரும்பிவிட்டதாக நினைத்த போலீசார், காமராஜர் ரோட்டில், டூவீலர் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களை அனுமதித்தனர்.
இதனால், அரிசிக்கடை வீதி சந்திப்பில் நின்றிருந்த முருகப்பெருமான் சப்பரம், மேம்பாலம் துவங்கும் இடத்தில், வாகன நெரி சலில் சிக்கியது. இதனால் அதிருப்தியடைந்த பக்தர்கள் வாக்குவாதம் செய்ததால், அதற்கு பிறகு மீண்டும் வாகனங்களை நிறுத்தி, போக்குவரத்து சீராக்கப்பட்டது.
இதனால், 15 நிமிடங்கள் பரபரப்பாக காணப்பட்டது. இருப்பினும், சூரசம்ஹார விழாவின் போது, காமராஜர் ரோட்டில் வாகனங்களை ஒழுங்குபடுத்த போதிய போலீசார் பணியில் இல்லாததே காரணம் என, பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

