/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அன்பு... கருணை... சேவை... ஆன்மிகப் பயணம்: ஸ்ரீசத்ய சாய்பாபா நுாற்றாண்டு விழா ஒரு வாரக் கொண்டாட்டம் நிறைவு
/
அன்பு... கருணை... சேவை... ஆன்மிகப் பயணம்: ஸ்ரீசத்ய சாய்பாபா நுாற்றாண்டு விழா ஒரு வாரக் கொண்டாட்டம் நிறைவு
அன்பு... கருணை... சேவை... ஆன்மிகப் பயணம்: ஸ்ரீசத்ய சாய்பாபா நுாற்றாண்டு விழா ஒரு வாரக் கொண்டாட்டம் நிறைவு
அன்பு... கருணை... சேவை... ஆன்மிகப் பயணம்: ஸ்ரீசத்ய சாய்பாபா நுாற்றாண்டு விழா ஒரு வாரக் கொண்டாட்டம் நிறைவு
ADDED : நவ 24, 2025 05:53 AM

திருப்பூர்: அன்பு, கருணை மற்றும் சேவையுடன் கூடிய ஆன்மிகப்பயணமாக அமைந்தது, ஸ்ரீசத்ய சாய்பாபாவின் பாதை. இப்பாதை லட்சக்கணக்கானோரை வழிநடத்துகிறது.
ஸ்ரீசத்ய சாய்பாபா நுாற்றாண்டு விழாவை, அவரது வழிகாட்டுதல்களையே அனைவருக்கும் முன்மாதிரியாக எடுத்துக்கூறும் வகையில், திருப்பூர் பக்தர்கள் கடந்த ஒரு வாரமாக கொண்டாடினர்.
பகவான் ஸ்ரீசத்ய சாய்பாபா நுாற்றாண்டு பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள அவரது பக்தர்கள் நுாற்றாண்டு பிறந்த நாளை கொண்டாடினர்.
மாவட்ட ஸ்ரீசத்யசாய் சேவா நிறுவனம் சார்பில் விழா ஒரு வார கால நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பி.என். ரோடு ராம் நகரில் உள்ள ஸ்ரீசத்ய சாய் சேவா மந்திரில், விழா நிகழ்ச்சிகள், கடந்த 16ல் துவங்கியது. தினமும் அதிகாலை 5:00 மணிக்கு ஓம்காரம்; சுப்ர பாதம் நிகழ்ச்சி; அதையடுத்து நகர சங்கீர்த்தனம் நிகழ்ச்சி நடந்தது.
தினமும் மாலை 5:00 மணிக்கு ருத்ரபாராயணம்; மாலை 6:00 மணிக்கு சிறப்பு பஜன் மற்றும் மங்கள ஆரத்தி, பக்திச் சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இவற்றில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
சமூக சேவைகள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக சமூக சேவைகளும் இடம்பெற்றிருந்தன. ரத்த தான முகாம்; முதியோர் இல்லங்களில் சேவை; மரக்கன்று நடுதல் மாற்றுத் திறனாளிகளுக்கு வீல் சேர் வழங்குதல் ஆகியனவும் நடைபெற்றது. திருவிளக்கு பூஜை; சுவாமிகள் பல்லக்கு ஊர்வலம்; பாலவிகாஸ் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை சிறப்பு சேர்த்தன.
கொடியேற்றம் நுாற்றாண்டு விழா கொண்டாட்டம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. நேற்று அதிகாலை ஓம்காரம், சுப்ரபாதம் மற்றும் நகர சங்கீர்த்தனம் நிகழ்வுகள் பி.என்., ரோடு ஸ்ரீசத்ய சாய் மந்திர் வளாகத்தில் நடந்தது. கணபதி ேஹாமம், மிருத்யுஞ்சய ேஹாமம் ஆகிய ேஹாமங்கள் நடந்தன.
மந்திர் வளாகத்தில் பிரசாந்தி கொடியேற்றம் பக்தர்கள் முன்னிலையில் நடந்தது. மொத்தம் 11 பயனாளிகளுக்கு இலவச வீல் சேர் மற்றும் உடைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து சிறப்பு நாராயண சேவையாக, அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
திருவீதியுலா நேற்று மாலை விநாயகர் கோவிலிலிருந்து சுவாமி புறப்பாடு நடந்தது. பல்லக்கில் சுவாமி எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாகதிருவீதியுலா நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு, பக்திப் பாடல்களைப் பாடியவாறு வந்தனர்.
சிறப்பு பஜன் திருவீதியுலா சாய் மந்திர் வளாகத்தில் நிறைவடைந்தது. தொடர்ந்து மந்திர் வளாகத்தில் ஸ்ரீசத்ய சாய்பாபாவின் உருவச் சிலை மற்றும் ஆளுயுர உருவப் படங்கள் அலங்கரித்து வைத்து வழிபாடு நடந்தது. சிறப்பு பஜன் நடத்தி பக்தர்கள் வழிபட்டனர்.
விழாவில், சாய் ஸ்ருதி பள்ளி மாணவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் அரங்கில் நடைபெற்றது. விழா நிறைவாக மங்கள ஆரத்தி நடத்தி பிரசாதம் வினியோகிக்கப்பட்டது.
அன்பு, கருணை மற்றும் சேவையுடன் கூடிய ஆன்மிகப்பயணமாக அமைந்தது, ஸ்ரீசத்ய சாய்பாபாவின் பாதை. அவரது நுாற்றாண்டு விழாவை, அவரது வழிகாட்டுதல்களையே அனைவருக்கும் முன்மாதிரியாக எடுத்துக்கூறும் வகையில், திருப்பூர் பக்தர்கள் கடந்த ஒரு வாரமாக கொண்டாடி நிறைவு செய்துள்ளனர்.

