/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தக்காளி வரத்து குறைவு; மழையால் மாற்றம்
/
தக்காளி வரத்து குறைவு; மழையால் மாற்றம்
ADDED : அக் 11, 2024 10:21 PM

உடுமலை : மழையால் உடுமலை சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்து, விலை அதிகரித்து வருகிறது.
உடுமலை சுற்றுப்பகுதிகளில் கிணற்று பாசனத்துக்கு ஆண்டு முழுவதும் பல ஆயிரம் ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. அறுவடை செய்யப்படும் தக்காளி, 14 கிலோ கொண்ட பெட்டிகளில் அடுக்கப்பட்டு, உடுமலை சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
கடந்த சில நாட்களாக உடுமலை பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், தக்காளி அறுவடை பாதித்துள்ளது. மேலும், விளைநிலங்களில் தண்ணீர் தேங்குவதால், தரமான தக்காளியும் கிடைப்பதில்லை.
இவ்வாறு, சந்தைக்கு வரத்து குறைந்து, 14 கிலோ கொண்ட பெட்டி நேற்று, 300 - 500 ரூபாய் வரை விற்பனையானது. விலை அதிகரித்தாலும், அறுவடை பாதித்துள்ளதால், விவசாயிகளுக்கு பலனில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.