/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மகோகனி மரக்கன்றுகள் இயற்கைக்கு மகோன்னதம்
/
மகோகனி மரக்கன்றுகள் இயற்கைக்கு மகோன்னதம்
ADDED : அக் 25, 2024 12:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : மூன்று லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கான இலக்குடன், 'வனத்துக்குள் திருப்பூர் திட்டம் - 10' பயணம் துவக்கப்பட்டுள்ளது. இதுவரை, 1.91 லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
வடகிழக்கு பருவமழை பெய்துவரும்நிலையில், மரக்கன்று நடுதல் வேகம் எடுத்துள்ளது. விவசாயிகள், தங்கள் நிலங்களில் மரக்கன்று நடுவதற்கு மிகுந்த ஆர்வம்காட்டி வருகின்றனர். மூலனுார் கோட்டார் பட்டி புதுாரில், நாட்ராயன் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மொத்தம் 220 மகோகனி மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.