/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாகனம் நிறுத்தும் மையங்களாக மாறிய பிரதான ரோடுகள்; விபத்துகள் அதிகரிப்பு
/
வாகனம் நிறுத்தும் மையங்களாக மாறிய பிரதான ரோடுகள்; விபத்துகள் அதிகரிப்பு
வாகனம் நிறுத்தும் மையங்களாக மாறிய பிரதான ரோடுகள்; விபத்துகள் அதிகரிப்பு
வாகனம் நிறுத்தும் மையங்களாக மாறிய பிரதான ரோடுகள்; விபத்துகள் அதிகரிப்பு
ADDED : அக் 08, 2024 12:17 AM
உடுமலை : உடுமலை பஸ் ஸ்டாண்ட் பகுதியில், ரோடுகள் வாகன நிறுத்தும் மையங்களாக மாறியுள்ளதால், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.
பொள்ளாச்சி ரோடு, தளி ரோடு, திருப்பூர் ரோடு, தாராபுரம் ரோடு உள்ளிட்ட ரோடுகளிலிருந்து, உடுமலை நகருக்குள் வரும் வாகனங்கள், பைபாஸ் ரோடு வழியாகவே வர வேண்டும்.
இங்குள்ள வணிக வளாகங்களுக்கு வரும் வாகனங்கள் அனைத்தும், பெரும்பகுதி ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகிறது. மாலை நேரத்தில், 20க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள், ரோட்டில் முழு பகுதியையும் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகிறது.
இதனால், மொத்த ரோடும் வாகன ஆக்கிரமிப்புகளால் மாயமாகி, மக்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு உள்ளது.
அதே போல், பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா பகுதியில், பழநி ரோடு, கல்பனா ரோடு சந்திப்பு, பொள்ளாச்சி ரோடு, ஐஸ்வர்யா நகர் ரோடு, அனுஷம் ரோடுகளை ஆக்கிரமித்தும், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால், இந்த ரோடுகளில் வாகன நெரிசல் நிரந்தரமாக உள்ளது.
உடுமலை பஸ் ஸ்டாண்டிற்கு, 5 நுழைவாயில்கள் உள்ள நிலையில், வாகனங்கள் நுழைவது, வெளியேறுவதில் உள்ள குழப்பம், அத்துமீறி பஸ்ஸ்டாண்டிற்கும் வரும், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் பஸ் ஸ்டாண்டின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து நிறுத்தப்படும், 50க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி கடைகள் காரணமாக, இங்கு விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.
ஆக்கிரமிப்பு கடைகளில், முறைகேடாக, அதிகாரிகள் வாடகை வசூல் செய்து கொள்வதால், ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது.
அதே போல், பிரதான ரோடுகளில், ஆம்னி பஸ்கள், வாகனங்கள் நிறுத்தப்படுவதால் ஏற்படும் நெரிசல் குறித்து, போக்குவரத்து போலீசாரும், நகராட்சி அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.
இதனால், உடுமலை பஸ் ஸ்டாண்ட் பகுதியில் போக்குவரத்து நெரிசலும், விபத்துக்களும் நிரந்தரமாக உள்ளது. இதற்கு தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.