/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மக்காச்சோளம் சாகுபடி; விவசாயிகள் தீவிரம்
/
மக்காச்சோளம் சாகுபடி; விவசாயிகள் தீவிரம்
ADDED : ஆக 02, 2025 11:34 PM

பொங்கலுார்: முக்கிய பணப்பயிராக மக்காச்சோளம் திகழ்கிறது. ஆடு, கோழி, மாட்டு தீவனத்துக்கு முக்கிய மூலப் பொருளாக மக்காச்சோளம் விளங்குகிறது. இதுதவிர, தற்பொழுது எத்தனால் தேவைக்காக அதிக அளவில் மக்காச்சோளம் கொள்முதல் செய்யப்படுகிறது.
இதனால், மக்காசோளம் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு விற்பனைக்கு பிரச்னை கிடையாது. பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனம் நடந்த பகுதிகளில் நிலத்தடி நீரை பயன்படுத்தி விவசாயிகள் வைகாசி பட்டத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளனர்.
தற்போது முதல் மண்டல பாசனத்திற்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பாசன பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது.
தற்போது சாகுபடி செய்துள்ள மக்காச்சோளம் அறுவடைக்கு வரும் பொழுது வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கும். அப்போது விளைச்சல் பெரிய அளவில் இருக்காது என்பதால் அதிக விலை கிடைக்கும். எனவே விலை உயர்வு கிடைக்கும் என்பதை எதிர்பார்த்து விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.