/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காரில் மது பாட்டில் கடத்தியவர் கைது
/
காரில் மது பாட்டில் கடத்தியவர் கைது
ADDED : ஜூலை 13, 2025 12:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி : அவிநாசி அருகே காரில் மது பாட்டில் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
நீலகிரியை சேர்ந்தவர் தீபக், 49. நேற்று முன்தினம் தனது காரில், ஊட்டி சென்று கொண்டிருந்தார். அவிநாசி அருகே நரியம்பள்ளிபுதுாரில், போலீசார் வாகன சோதனை செய்ததில், கர்நாடக மாநில மதுபாட்டில்கள் இருந்தன. காரில் வந்த தீபக்கை கைது செய்த போலீசார், 78 மது பாட்டில் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.