/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மனங்கவரும் 'மானசரோவர்' ஆயத்த ஆடை கண்காட்சி
/
மனங்கவரும் 'மானசரோவர்' ஆயத்த ஆடை கண்காட்சி
ADDED : ஜூலை 31, 2025 11:24 PM

திருப்பூர்; சென்னையை சேர்ந்த 'மானசரோவர்' நிறுவனம், 36 ஆண்டுகளாக தமிழகம் முழுக்க சூட்டிங்ஸ், சர்ட்டிங்ஸ் மற்றும் எக்ஸ்போர்ட் சர்ப்பிளஸ் கண்காட்சி மற்றும் விற்பனையை நடத்தி வருகிறது.
அதன் நிறுவனத்தினர் கூறியதாவது:தற்போது, இந்நிறுவனம் சார்பில் திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள அரோமா ஓட்டலில், ஆண்களுக்கான ரெடிமேட் ஆடைகள் மற்றும் துணிகள் சிறப்பு விற்பனைக் கண்காட்சி நடக்கிறது.
இங்கு ரேமண்ட், அரவிந்த், மேக் ெஹன்றி, ஹியாராம்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் தயாரித்த ரெடிமேட் ஆடைகள், துணி ரகங்கள் மற்றும் எக்ஸ்போர்ட் சர்ப்பிளஸ் சூட்டிங்ஸ், சர்ட்டிங்ஸ், டிரவுசர், டி சர்ட்கள் குறைந்த விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
பெண்களுக்கான சுடிதார் மற்றும் சுடிதார் மெட்டீரியல்களும் உள்ளன. மேலும், டி-ஷர்ட்ஸ், மெத்தை விரிப்புகள் என, பல 'பிராண்ட்' ரகங்கள் உள்ளன.
இங்கு வாங்கும் ஆடைகளுக்கு, 40 சதவீதம் வரை தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு விற்பனை, ஆக., 17 ம் தேதி வரை, தினமும் காலை, 10:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை நடக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினார்.