/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மணி மண்டப சுற்றுச்சுவர் பணி; விரைந்து முடிக்க வலியுறுத்தல்
/
மணி மண்டப சுற்றுச்சுவர் பணி; விரைந்து முடிக்க வலியுறுத்தல்
மணி மண்டப சுற்றுச்சுவர் பணி; விரைந்து முடிக்க வலியுறுத்தல்
மணி மண்டப சுற்றுச்சுவர் பணி; விரைந்து முடிக்க வலியுறுத்தல்
ADDED : நவ 11, 2025 10:42 PM

உடுமலை: உடுமலை நாராயணகவி மணி மண்டப சுற்றுச்சுவர் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூளவாடியை சேர்ந்தவர் நாராயணகவி. பாடலாசிரியரான இவருக்கு உடுமலையில் மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இங்கு, போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு நுாலகமும் செயல்பட்டு வருகிறது.
இதன் வாயிலாக, உடுமலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச்சேர்ந்த இளைஞர்கள், மாணவ, மாணவியர் பயன்பெற்று வருகின்றனர். இம்மணி மண்டபத்தின் சுற்றுச்சுவர், கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு புறம் இடிந்து விழுந்தது. இதை சரிசெய்ய வேண்டும் என வாசகர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், முழுவதுமாக கட்டுமான பணிகள் தற்போது நடந்து வருகிறது. மணி மண்டபத்தை சுற்றிலும் பசுமையான மரங்கள் உள்ளன.
சுற்றுச்சுவர் கட்டுமான பணியின் போது, மரங்கள் பாதிக்காத வகையில், இப்பணியை விரைந்து முடிக்க வேண்டும், என பொதுமக்கள் அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர்.