/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'மரைன் கேட்டரிங்' என்றும் மவுசு; கைநிறையச் சம்பளம் உத்தரவாதம்
/
'மரைன் கேட்டரிங்' என்றும் மவுசு; கைநிறையச் சம்பளம் உத்தரவாதம்
'மரைன் கேட்டரிங்' என்றும் மவுசு; கைநிறையச் சம்பளம் உத்தரவாதம்
'மரைன் கேட்டரிங்' என்றும் மவுசு; கைநிறையச் சம்பளம் உத்தரவாதம்
ADDED : ஏப் 07, 2025 05:54 AM

'மரைன் கேட்டரிங் ஓட்டல் மேனேஜ்மென்ட்' குறித்து மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி கல்லுாரி மரைன் கேட்டரிங் துறைத்தலைவர் சுரேஷ்குமார் பேசியதாவது:
பிளஸ் 2 தேர்ச்சியில் அதிக மதிப்பெண் பெற்றால் தான் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கு செல்ல முடியும். 70 சதவீத மதிப்பெண்களுக்கு குறைவாக பெற்றாலும், நீட், ஜே.இ.இ., உள்ளிட்ட தகுதித்தேர்வுகள் எழுதாவிட்டாலும், மரைன் கேட்டரிங் முடித்தவர் நம் நாட்டிலும், வெளிநாட்டில் பணியாற்ற முடியும். என்றுமே மவுசு குறையாத துறையாக உணவு கலை துறை இருக்கும். கேட்டரிங்கில் பல படிப்புகள் உள்ளன; மரைன் கேட்டரிங் படிப்பு சற்று வித்தியாசமானது. உடல்தகுதி மிக முக்கியம்.
மரைன் டிகிரி முடித்தவுடன் கப்பலில் பணியாற்றலாம். ஆனால் பாஸ்போர்ட், எஸ்.டி.சி.டபுள்யூ, சி.டி.சி., சான்றிதழ் இருந்தால் மட்டுமே அந்த வாய்ப்பு கிடைக்கும். அந்த சான்றிதழ்களைஅளிக்கும் நிறுவனங்களில் மட்டுமே இந்தப் படிப்புகளில் சேர முடியும். சர்வதேச கப்பல் நிறுவனங்கள் சலுகை வழங்கி தகுதியானவர்களை வேலைக்கு அழைக்கிறது.
வேலைக்கு தேர்வாகிறவர்களுக்கு உணவு தயாரிப்பு, பரிமாறுதல், வரவேற்றல், கப்பலில் அடிப்படை உள்ளிட்டவை முழுமையாக கற்றுத்தருகின்றனர். கப்பல் எந்தந்த நாடுகளுக்கு பயணிக்கிறதோ, அத்தகைய நாடுகளுக்கு, உலகம் முழுதும், சுற்றி பார்க்கலாம். கப்பல்களில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர் பணிபுரிபவர் அவர்களுடன் நமக்கு நல்ல தகவல் தொடர்பு, மொழியறிவு கிடைக்கும். கை நிறைய சம்பளமும், சொகுசான வாழ்க்கையும் 'மரைன் கேட்டரிங்' படிப்பில் மூலம் கிடைக்கும்.
பெண்களுக்கும் ஏற்ற துறையாக மாறி வருகிறது. சில நாட்கள் பணியாற்றி விட்டு, நாடு திரும்பினால், நீங்கள் சுயமாக தொழில் துவங்கவும் முடியும். வாழ்க்கையின் முக்கியமான கால கட்டம் இந்த மூன்று ஆண்டு. படிப்பை தேர்வு செய்யும் முன் யோசியுங்கள். எடுத்த பின் யோசிக்காதீர்.

