/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மனிதநேயம் காட்டிய மாதேஸ்வரி மருத்துவமனை
/
மனிதநேயம் காட்டிய மாதேஸ்வரி மருத்துவமனை
ADDED : ஆக 20, 2025 01:20 AM

திருப்பூர்; அவிநாசி மாதேஸ்வரி மருத்துவமனை, ரோட்டரி திருப்பூர் செலிப்ரேஷன் சுார்பில், 69 வயது முதியவருக்கு 1.50 லட்சம் மதிப்புள்ள முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை இலவசமாக அளிக்கப்பட்டது.
விவசாயி ரங்கசாமி என்பவர் கடுமையான முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்தார். டாக்டர். சதீஷ்குமார் தலைமையிலான மருத்துவக்குழு, அவிநாசி மாதேஸ்வரி மருத்துவமனையில், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்தது.
இதற்கான முழு செலவையும், மாதேஸ்வரி மருத்துவமனை, திருப்பூர் ரோட்டரி செலிப்ரேஷன், எஸ்.பி.ஆர்., அறக்கட்டளை சார்பில், ஏற்றுக்கொள்ளப்பட்டது.
எஸ்.பி.ஆர்.,அறக்கட்டளை நிறுவனர் ராஜ்குமார், மருத்துவமனை நிர்வாக மேலாளர் டாக்டர் பிரகாஷ் கூறுகையில்,''சமூகத்தில் உண்மையான தேவை உள்ளவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் மருத்தவ சேவை வழங்குகிறோம். ஆண்டுக்கு குறைந்தது மூன்று அறுவை சிகிச்சையை இலவசமாக வழங்க வேண்டும் என திட்டமிட்டுள்ளோம்,'' என்றனர்.