/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முதலீட்டு மானிய திட்டத்தில் அதிகபட்ச கெடுபிடி; திருப்பூர் சாய ஆலைகள் பயனடைய முடியாது: அரசு சிறப்பு கவனம் செலுத்த எதிர்பார்ப்பு
/
முதலீட்டு மானிய திட்டத்தில் அதிகபட்ச கெடுபிடி; திருப்பூர் சாய ஆலைகள் பயனடைய முடியாது: அரசு சிறப்பு கவனம் செலுத்த எதிர்பார்ப்பு
முதலீட்டு மானிய திட்டத்தில் அதிகபட்ச கெடுபிடி; திருப்பூர் சாய ஆலைகள் பயனடைய முடியாது: அரசு சிறப்பு கவனம் செலுத்த எதிர்பார்ப்பு
முதலீட்டு மானிய திட்டத்தில் அதிகபட்ச கெடுபிடி; திருப்பூர் சாய ஆலைகள் பயனடைய முடியாது: அரசு சிறப்பு கவனம் செலுத்த எதிர்பார்ப்பு
ADDED : செப் 30, 2025 01:06 AM
திருப்பூர்; புதிதாக அறிவிக்கப்பட்ட, முதலீட்டு மானிய திட்டத்தில், விதிமுறைகள் கடுமையாக இருப்பதால், திருப்பூர் சாய ஆலைகள் பயன்பெற முடியாதென, உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
தமிழக அரசு, பதப் படுத்தும் தொழில் பிரிவில், புதிய தொழில் துவங்கவும், இயங்கி வரும் தொழிலை மேம்படுத்தவும் ஏதுவாக, 25 சதவீதம் மானியத்துடன் கூடிய, தொழில் முதலீட்டு மானிய திட்டத்தை அறிவித்தது. இது, திருப்பூர் சாய ஆலைகள் அடுத்தகட்ட மேம்பாட்டுக்கு கைகொடுக்கும். குறிப்பாக, 25 சதவீத மானியம் கிடைக்கும் என்பதால், புதிய தொழில் துவங்கப்படாவிட்டாலும், கைசவம் உள்ள ஆலைகளை மேம்படுத்த முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது.
இருப்பினும், தமிழக அரசின் முதலீட்டு மானிய திட்டத்தில் விதிமுறைகள் கடுமையாக இருப்பதால், பயன்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இந்நிலையில், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் குறித்த ஆலோசனை கூட்டத்தில், இத்திட்டத்தில் பயன் பெறும் வகையில், சிறப்பு சலுகை அளிக்க வேண்டு மென, கோரிக்கை வைக்கப்பட்டது.
விதிமுறை திருத்தம் செய்ய வேண்டும் இதுகுறித்து திருப்பூர் சாய ஆலை உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக, சாய ஆலைகளில், புதிய தொழில்நுட்பத்தை செயல்படுத்த இயலவில்லை. அதற்காக மானியம் வழங்கிய 'டப்' திட்டத்தை மத்திய அரசு நிறுத்திவிட்டது. இந்நிலையில், தமிழக அரசு அறிவித்த முதலீட்டு மானிய திட்டத்தில், 25 சதவீத மானியத்துடன், தொழில்நுட்பத்தை மேம்படுத்தலாம் என்று மகிழ்ச்சி அடைந்திருந்தோம்.
அரசு வெளியிட்டுள்ள விதிமுறைகள் கடுமையாக இருப்பதால், திருப்பூர் பயன்பெற முடியாது. தமிழக அரசு பட்டியலிட்டுள்ள, 13 வகையான, குறு, சிறு தொழில்கள் பட்டியலில், திருப்பூர் சாய ஆலைகள் இடம்பெறவில்லை; சாயத்தொழிலை இணைக்க வேண்டும்.
முதலீட்டு மானிய திட்டத்தில், 15 கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்ய வேண்டும் என்கின்றனர். இயங்கி வரும் தொழிலில், அவ்வளவு முதலீடு செய்ய முடியாது.
தேவையெனில், ஐந்து கோடி ரூபாய் வரை, 5 முதல் 10 கோடி ரூபாய், 10 முதல், 15 கோடி ரூபாய் என்று மூன்று பிரிவாக பிரித்து, மானியம் வழங்க முன்வர வேண்டும்.
சாய ஆலைகள் சிவப்பு வகைப்பாட்டில் இருப்பதால், இத்திட்டத்தில் பயன்பெற முடியாது என்கின்றனர். நமது நாட்டிலேயே, திருப்பூரில் மட்டும்தான், 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தில் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. அத்தகைய சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைக்காக, சிவப்பு வகைப்பாட்டில் இருந்து, திருப்பூர் சாய ஆலை களுக்கு சலுகை வழங்க வேண்டும்.
தமிழக அரசு, பதப் படுத்தும் தொழில்களுக்காக அறிவித்த முதலீட்டு மானிய திட்டத்தில், நாங்களும் பயன்பெறும் வகையில், விதிமுறைகளை திருத்தம் செய்ய வேண்டும். திருப்பூர் சாய ஆலைகளை பாதுகாக்க கருணை காட்ட வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.