/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இலவச செயற்கை அவயம் வழங்க அளவீடு
/
இலவச செயற்கை அவயம் வழங்க அளவீடு
ADDED : ஆக 10, 2025 11:04 PM

திருப்பூர், ;திருப்பூர் மாவட்ட சக் ஷம் அமைப்பு சார்பில், 17வது மாதாந்திர தொடர் நிகழ்ச்சியாக, மாற்றுத்திறனாளிகளுக்கு, இலவச செயற்கை அவயம் வழங்கும் நிகழ்ச்சி, செல்வ விநாயகர் கோவில் மண்டபத்தில் நேற்று நடந்தது.
மாவட்ட தலைவர் ரத்தினசாமி தலைமை வகித்தார். செயலாளர் தமிழ்செல்வம் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தார்.
விண்ணப்பித்திருந்த, 24 நபர்களுக்கு, செயற்கை கால் மற்றும் உபகரணங்கள் வழங்க அளவீடு மேற்கொள்ளப்பட்டது. அடுத்தமாத நிகழ்ச்சியில், செயற்கை அவயம் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது.
பூச்சக்காடு தம்பி நண்பர்கள் நற்பணி மன்றத்துடன் இணைந்து, இலவச கண் பரிசோதனை முகாம், ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனைகள் நடந்தது.
சக் ஷம் அமைப்பின் மாநில பொறுப்பாளர் பிரதீப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.