நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்; மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறைசார்பில், பொங்கலுாரிலுள்ள பி.யு.வி.என்., துவக்கப்பள்ளி வளாகத்தில் நடந்தது.
முகாமில் பங்கேற்றவர்களுக்கு தேசிய அடையாள அட்டை, ஐந்து நபர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்க பரிந்துரை செய்யப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் மற்றும் ரயில் பயண அட்டை வழங்கப்பட்டது.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்தராம்குமார், மாவட்ட உள்ளடங்கிய கல்வி ஒருங்கிணைப்பாளர் பாலசுந்தரி, பொங்கலுார் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் குமார், வட்டார கல்வி அலுவலர் சியாமளா, முன்னாள் ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியம், பொங்கலுார் வட்டார வள மைய ஒருங்கிணைப்பாளர் (பொறுப்பு) சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

