ADDED : ஏப் 28, 2025 04:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் மாவட்ட பாவ்ஷார் சக் ஷத்திரிய சங்கம், ஸ்ரீ பாண்டுரங்கன் ருக்மாயி சேவா டிரஸ்ட், கோவை பி.எஸ்.ஜி., மருத்துவமனை, தி ஐ பவுண்டேசன் சார்பில், இலவச மருத்துவ ஆலோசனை முகாம், வாலிபாளையத்தில் உள்ள ஒரு அரங்கத்தில் நடந்தது.
மாவட்ட பாவ்ஷார் சக் ஷத்திரிய சங்க தலைவர் ரமேஷ், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் (ஓய்வு) ஆறுமுகம் ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர். ஹார்வி குமாரசாமி மண்டப டிரஸ்டி கிருஷ்ணகுமார், சேலம் ரயில்வே கோட்ட ஆலோசனை குழு உறுப்பினர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தனர். முகாமில், 200 பேருக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. ஸ்ரீ பாண்டுரங்கன் ருக்மாயி சேவா டிரஸ்ட் தலைவர் பிரகாஷ் நன்றி கூறினார்.

