/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை
/
தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை
ADDED : செப் 28, 2025 08:09 AM
திருப்பூர் : லகு உத்யோக் பாரதி மற்றும் சித்ரா சாரிட்டி மருத்துவமனை சார்பில், திருப்பூர் பனியன் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, வெங்கமேட்டில் உள்ள குவாலியன்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தில், இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. லகு உத்யோக் பாரதி மாவட்ட தலைவர் ஸ்ரீதரன் துவக்கி வைத்தார்.
நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் பணிபுரியும், 450 தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
சர்க்கரை நோய், ஆஸ்துமா, தைராய்டு, அல்சர், மூட்டு வலி, பித்தப்பை கல், ரத்த அழுத்தம் கர்ப்ப பை பிரச்னை, சிறுநீரக கல் உட்பட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. மேலும், அவர்கள் பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து, காப்பீடு அட்டை வழங்கப்பட்டது.