/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'68 ஆயிரம் ஓட்டுச்சாவடிகளின் வாக்காளர்களுடன் சந்திப்பு'
/
'68 ஆயிரம் ஓட்டுச்சாவடிகளின் வாக்காளர்களுடன் சந்திப்பு'
'68 ஆயிரம் ஓட்டுச்சாவடிகளின் வாக்காளர்களுடன் சந்திப்பு'
'68 ஆயிரம் ஓட்டுச்சாவடிகளின் வாக்காளர்களுடன் சந்திப்பு'
ADDED : செப் 14, 2025 11:47 PM
திருப்பூர்; திருப்பூர் தெற்குஎம்.எல்.ஏ., செல்வராஜ் (தி.மு.க.,) திருப்பூரில் நேற்று கூறியதாவது:
ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில், கடந்த 70 நாட்களில் கட்சியின் ஏழு லட்சம் பிரதிநிதிகள், மாநிலம் முழுவதும் 68 ஆயிரம் ஓட்டுச் சாவடிகளைச் சேர்ந்த வாக்காளர்களைச் சந்தித்தோம்.
திருப்பூர் தெற்கு தொகுதியில் 1,30,600 பேர்; பல்லடம் தொகுதியில் 1,89,667 பேர் அவ்வகையில் இணைக்கப்பட்டுள்ளனர். இதன் இரண்டாம் கட்டத்தில், இதில் இணைந்த குடும்பங்கள் ஒன்றிணைந்து தமிழகத்தைப் பாதுகாக்கும் தீர்மானங்கள் மீது உறுதி ஏற்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது அதன்படி செப்., 15 அண்ணாதுரை பிறந்த நாளில் இந்தஉறுதி மொழி ஏற்பு நடைபெறும்.
ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் உறுப்பினர் சேர்க்கைக்குச் சென்ற போது, மக்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவியது. ஆவலுடன் இதில் அவர்கள் இணைந்தனர். மக்கள் மத்தியில் இந்த அரசு கொண்டு வந்த திட்டங்கள் இடம் பிடித்து விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.