/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசுத்துறை பணி குறித்துஅமைச்சர்கள் ஆய்வு
/
அரசுத்துறை பணி குறித்துஅமைச்சர்கள் ஆய்வு
ADDED : ஜன 05, 2025 02:11 AM
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், அரசு துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் நிலவரம் குறித்து அமைச்சர்கள் நேற்று கலெக்டர் அலுலகத்தில் ஆய்வு நடத்தினர்.
திருப்பூர் மாவட்டத்தில், உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணி, நகர்ப்புற மேம்பாட்டு திட்டப்பணி, தொகுதி வளர்ச்சித் திட்டப் பணிகள், மத்திய மற்றும் மாநில நிதிக்குழு மானியத் திட்டப் பணிகள் உள்ளிட்ட அனைத்து திட்டங்களின் கீழ் நடைபெற்று வரும் பணிகள், மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்தும் ஆய்வு நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இக்கூட்டத்தில் அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர் தலைமையில், கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலையில், அரசுத் துறை அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
கடந்த, 3 ஆண்டுகளில் மாவட்டத்தில் மகளிர் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள், அரசு அறிவித்த திட்டங்களின் செயல்பாடுகள்; நீர் வள ஆதாரத்துறை பணிகள் உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு நடந்தது. துறைவாரியாக மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள் அவற்றை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு திறக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினர்.

