/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறுபான்மையினருக்கு ரூ.24.60 லட்சத்தில் உதவி
/
சிறுபான்மையினருக்கு ரூ.24.60 லட்சத்தில் உதவி
ADDED : மார் 21, 2025 10:10 PM
- நமது நிருபர் -
திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், சிறுபான்மை ஆணையம் சார்பில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலைவகித்தார். ஆய்வுக்கூட்டத்தின் ஒரு பகுதியாக, சிறுபான்மையினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கிறிஸ்தவ சர்ச் பழுதுபார்த்தல் மற்றும் புணரமைப்பு நிதி வழங்கும் திட்டத்தில், ஒரு பயனாளிக்கு 1.50 லட்சம் ரூபாய்; மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் சார்பில், 155 பயனாளிகளுக்கு 8.50 லட்சம் ரூபாய்; மாவட்ட கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் சார்பில், 146 பயனாளிகளுக்கு 14.60 லட்சம் ரூபாய்; 14 நபர்களுக்கு உலமா மற்றும் பணியாளர் நல வாரிய அடையாள அட்டை; 6 பேருக்கு கிறிஸ்தவ சர்ச்களில் பணிபுரியும் உபதேசியர்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரிய அடையாள அட்டை என, 322 பயனாளிகளுக்கு, மொத்தம், 24.60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
சிறுபான்மையினர் ஆணைய தலைவர் அருண், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.