தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/‘மிக்சர் சால்ட்’ சுத்திகரிப்பு அனுமதி வழங்க எதிர்பார்ப்பு

‘மிக்சர் சால்ட்’ சுத்திகரிப்பு அனுமதி வழங்க எதிர்பார்ப்பு

‘மிக்சர் சால்ட்’ சுத்திகரிப்பு அனுமதி வழங்க எதிர்பார்ப்பு


UPDATED : அக் 27, 2026 07:59 PM

ADDED : அக் 27, 2026 07:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2026 07:59 PM ADDED : அக் 27, 2026 07:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: ‘‘கலவை உப்பை நவீன தொழில்நுட்பத்தில் சுத்திகரித்து, மறுபயன்பாட்டுக்கு வழங்க அனுமதி பெற்றுத்தர வேண்டும்’’ என, காசிபாளையம் பொது சுத்திகரிப்பு நிலைய நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் வந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ், காசிபாளையம் பொது சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சாயக்கழிவுநீர் சேகரிப்பு, படிப்படியான சுத்திகரிப்பு, சுத்திகரிக்கப்பட்ட நீரை மீண்டும் பயன்படுத்துதல், உப்பு பிரித்தெடுத்தல் உள்ளிட்ட செயல்முறைகளை நிர்வாகிகள் விளக்கினர். சுத்திகரிப்பின் ஒவ்வொரு கட்டத்திலும் நீரின் உப்புத்தன்மை, கடினத்தன்மை குறைவதையும் மாதிரிகள் மூலம் விளக்கினர்.

‘ஜீரோ டிஸ்சார்ஜ்’ தொழில்நுட்பத்தில் திருப்பூர் வெற்றி பெற்றுள்ளதாக அமைச்சர் பாராட்டினார். எதிர்காலத்தில் ஈரோடு உள்ளிட்ட ஜவுளித் தொழில் சார்ந்த மாவட்டங்களிலும் இத்தொழில்நுட்பம் கட்டாயமாக்கப்படும் எனத் தெரிவித்ததாக நிர்வாகிகள் கூறினர்.

அவர்கள் கூறுகையில், “சுத்திகரிப்பு நிலையத்தில் கலவை உப்பு உருவாவதைக் குறைத்துள்ளோம். நவீன தொழில்நுட்பத்தில் அதைச் சுத்திகரித்துப் பிரித்து, மீண்டும் பயன்படுத்த அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளோம். மத்திய வாரியத்திடம் விரைவில் அனுமதி பெற்றுத்தர அமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம். இதுகுறித்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்,” என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us