/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரிதன்யாவின் குடும்பத்தினருக்கு எம்.எல்.ஏ., தனபால் ஆறுதல்
/
ரிதன்யாவின் குடும்பத்தினருக்கு எம்.எல்.ஏ., தனபால் ஆறுதல்
ரிதன்யாவின் குடும்பத்தினருக்கு எம்.எல்.ஏ., தனபால் ஆறுதல்
ரிதன்யாவின் குடும்பத்தினருக்கு எம்.எல்.ஏ., தனபால் ஆறுதல்
ADDED : ஜூலை 04, 2025 12:40 AM

அவிநாசி; தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் குடும்பத்தினருக்கு, எம்.எல்.ஏ., தனபால் ஆறுதல் கூறினார்.
அவிநாசியில் கடந்த 28ம் தேதி திருமணமாகி, 78வது நாளில், ரிதன்யா, 27, என்ற இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக, அவரின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், ரிதன்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு, நேற்ற எம்.எல்.ஏ., தனபால் ஆறுதல் கூறினார். அப்போது, ரிதன்யாவின் பெற்றோரிடம் தனபால் பேசுகையில், ''நமது அரசாங்கமாக இருந்திருந்தால், இதுபோல் நடந்திருக்காது. கட்சியின் பொது செயலாளர் பழனிசாமியிடம் இது குறித்து விரிவாக பேசி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகிறேன்,'' என்றார்.
ஒன்றிய செயலாளர்கள் ரவிக்குமார், சேவூர் வேலுசாமி, தனபால், ஒன்றிய பொருளாளர் ரமேஷ், மாநில இளைஞரணி செயலாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், நகர செயலாளர் ஜெயபால், துணை செயலாளர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு துரைப்பாண்டி, ஹரிஹரன், பழங்கரை ஊராட்சி முன்னாள் தலைவர் செந்தில் உள்ளிட்டோர் இருந்தனர்.