/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மணி பப்ளிக் பள்ளியில் 'மாம் அன் கிட்ஸ்' விழா
/
மணி பப்ளிக் பள்ளியில் 'மாம் அன் கிட்ஸ்' விழா
ADDED : செப் 12, 2025 10:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர், தில்லை நகரில், மணி பப்ளிக் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில், மழலையர் வகுப்புக்கான, 'மாம் அன் கிட்ஸ்' விழா நடைபெற்றது. இதில் மழலையர் வகுப்பு மாணவர்கள் மற்றும் அவர்கள் பெற்றோர்கள் பங்கேற்றனர்.
இதையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்வுகள் வாயிலாக மாணவர்களுக்கு அவர் தம் தாய் உடனான, புரிதல் தன்மை, அன்புணர்ச்சி, விவேகம் ஆகியன வெளிப்பட்டது. நிகழ்வில் விஜயதசமி முன்னிட்டு நடைபெறும் மாணவர் சேர்க்கைக்கு முன் பதிவும் நடந்தது. விழாவில் மாணவர்கள், பெற்றோர், மழலையர் வகுப்பு ஆசிரியர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.