/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கண்காணிப்பு குளறுபடி; பி.ஏ.பி., நீர் குறைகிறது; விவசாயிகள் குமுறல்
/
கண்காணிப்பு குளறுபடி; பி.ஏ.பி., நீர் குறைகிறது; விவசாயிகள் குமுறல்
கண்காணிப்பு குளறுபடி; பி.ஏ.பி., நீர் குறைகிறது; விவசாயிகள் குமுறல்
கண்காணிப்பு குளறுபடி; பி.ஏ.பி., நீர் குறைகிறது; விவசாயிகள் குமுறல்
ADDED : பிப் 03, 2025 11:49 PM

- நமது நிருபர் -
'பி.ஏ.பி., திட்ட கண்காணிப்பு சரியில்லாததால், ஆண்டுக்கு ஆண்டு தண்ணீர் குறைகிறது. 18 நாள் முதல், 21 நாள் இடைவெளியில் கிடைத்த சுற்று தண்ணீர், தற்போது 30 நாட்களாகிவிடுகிறது என பி.ஏ.பி., பாசன பாதுகாப்பு சங்க நிர்வாகி முத்துசாமி பேசினார்.
மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., கார்த்திகேயன் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். விவசாயிகள், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.
தண்ணீர் திருட்டு
ஞானபிரகாசம், குடிமங்கலம்: குடிமங்கலம் சுற்றுப்பகுதியில், தென்னை வாடல் நோய்க்கு நிவாரணம் கிடைக்கவில்லை. கூட்டுறவு சங்கத்துக்கு செயலாளர் மற்றும் பணியாளர்களை நியமிக்க வேண்டும். அரசூர் அருகே, பி.ஏ.பி., தண்ணீர் அதிகம் திருடப்படுகிறது. கூட்டுறவு கடன் சங்கத்தில், இரண்டு லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் உத்தரவை அமல்படுத்த வேண்டும்.
காட்டுப்பன்றி தொல்லை
மவுனகுருசாமி, உடுமலை: தென்னையை தாக்கும் பூச்சிநோய் தாக்குதலை கட்டுப்படுத்த, அரசு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். காட்டுப்பன்றி தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். ஓராண்டுக்கு மேலாகியும், காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த இயலவில்லை.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு நிர்வாகி முகிலன்: அரசு அலுவலர்கள் செய்யும் சமூக பணியை செய்யும் தன்னார்வலர்களுக்கு பாதுகாப்பு இல்லை. கனிமவள அதிகாரிகள், கல்குவாரிகளில் நடக்கும் கொள்ளையை கட்டுப்படுத்த வேண்டும். பாதுகாப்பு நலன்கருதி, சமூக ஆர்வலர்களுக்கு துப்பாக்கி லைசென்ஸ் வழங்க வேண்டும்.
பி.ஏ.பி., பாசன பாதுகாப்பு சங்க நிர்வாகி முத்துசாமி கூறுகையில், 'பி.ஏ.பி., திட்ட கண்காணிப்பு சரியில்லாததால், ஆண்டுக்கு ஆண்டு தண்ணீர் குறைகிறது. 18 நாள் முதல், 21 நாள் இடைவெளியில் கிடைத்த சுற்று தண்ணீர், தற்போது 30 நாட்களாகிவிடுகிறது. நீர்மேலாண்மையை சீரமைக்க வேண்டும்' என்றார்.

