/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுரங்க பாதையில் வெளிச்சம் இன்றி வாகன ஓட்டுநர்கள் தவிப்பு
/
சுரங்க பாதையில் வெளிச்சம் இன்றி வாகன ஓட்டுநர்கள் தவிப்பு
சுரங்க பாதையில் வெளிச்சம் இன்றி வாகன ஓட்டுநர்கள் தவிப்பு
சுரங்க பாதையில் வெளிச்சம் இன்றி வாகன ஓட்டுநர்கள் தவிப்பு
ADDED : நவ 07, 2024 08:06 PM
உடுமலை; உடுமலை, தளி ரோடு சுரங்கப்பாதையில் வெளிச்சம் இல்லாததால், வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர்.
உடுமலை, தளி ரோடு ரயில்வே பாலத்தின் கீழ், வாகனங்கள் கடந்து செல்வதற்கான சுரங்கப்பாதை உள்ளது. அதிகமான வாகன ஓட்டுநர்கள் இந்த பாதையை பயன்படுத்துகின்றனர்.
சுரங்கபாதையின் அருகில் உள்ள மின் விளக்குகள், அடிக்கடி பழுதடைந்து எரியாமல் போகின்றன. இதனால், இருபக்கத்திலிருந்தும் வரும் வாகனங்கள் சுரங்கப்பாதையில் நுழையும் முன், 'ஹாரன் அடித்து' செல்கின்றன.
இருப்பினும் மாலை நேரங்களில், வாகனங்கள் சுரங்கப்பாதையை கடந்து செல்ல சிரமப்படுகின்றன. சைக்கிள்களில் வருவோர் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர்.
வாகனங்கள் சில நேரங்களில் அதிவேகத்தோடு வருவதால், எதிரே வாகனங்கள் நெருங்கி வந்தவுடன் தான் அடையாளம் கண்டு, வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்துக்குள்ளாகின்றனர்.
சுரங்கப்பாதையின் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது மழைநீரும் பாதையில் தேங்கியுள்ளது. இதனால் இருளில் வாகன ஓட்டுநர்கள், சுரங்கப்பாதையை கடந்து வருவது சாகசமாகவே மாறிவிட்டது.
பாதுகாப்பில்லாத சூழலாகவும் உள்ளது. அப்பகுதியில் உள்ள விளக்குகள் பழுதில்லாமல் எரிவதற்கும், ரோட்டை சீரமைப்பதற்கும், நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.