/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'முதலிபாளையம் - விஜயாபுரம் டவுன் பஸ் இயக்க வேண்டும்'
/
'முதலிபாளையம் - விஜயாபுரம் டவுன் பஸ் இயக்க வேண்டும்'
'முதலிபாளையம் - விஜயாபுரம் டவுன் பஸ் இயக்க வேண்டும்'
'முதலிபாளையம் - விஜயாபுரம் டவுன் பஸ் இயக்க வேண்டும்'
ADDED : அக் 30, 2025 12:41 AM
திருப்பூர்: 'பள்ளிக்கு வரும் மாணவர்கள், திருப்பூருக்கு வரும் தொழிலாளர் வசதிக்காக முதலிபாளையம் - விஜயாபுரத்தை இணைக்கும் வகையில் டவுன் பஸ் இயக்க வேண்டும்,' என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
திருப்பூர், முதலிபாளையம், ஹவுசிங் யூனிட், கெங்கநாயக்கன்பாளையம் பகுதிகளை இணைத்து, காங்கயம் ரோடு வழியாக திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டு க்கு, டவுன் பஸ் (எண்:47 சி) இயக்கப்படுகிறது.
சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, 100 பேர் இந்த பஸ்சில் தினசரி பயணிக்கின்றனர். மேற்கண்ட பகுதியை சேர்ந்த மாணவர்களுக்கு மேல் நிலைப்பள்ளியாக படியூர் மற்றும் விஜயாபுரம் பள்ளிகள் உள்ளன.
முதலிபாளையம் பகுதியில் இருந்து விஜயாபுரம் பள்ளிக்கு செல்ல வேண்டிய மாணவர்கள், காங்கயம் ரோடு பிரிவு ஸ்டாப்பில் இறங்கி, 1.5 கி.மீ., நடந்து வர வேண்டியுள்ளது.
பஸ் தாமதமாகும் போது பள்ளிக்கு செல்வதும் தாமதமாகி விடுகிறது.
பெற்றோர் கூறியதாவது:
திருப்பூர், முதலிபாளையம், ஹவுசிங் யூனிட் பகுதியில் முன் குடியிருப்புகள், மக்கள் குறைவாக இருந்தனர். தற்போது குடியிருப்பு அதிகமாகி விட்டது. சுற்றுவட்டார பகுதியில், 5,000 பேர் வசிக்கின்றனர். அனைவராலும் டூவீலரில் சென்று வர முடியவில்லை.
அன்றாட பிழைப்புக்கு திருப்பூருக்கு வந்து திரும்ப வேண்டியுள்ளது. பள்ளி மாணவ, மாணவியர், தொழிலாளர் அனைவரும் ஒரே பஸ்சில் (காலை 7:30 - 8:00 மணிக்குள்) பயணிப்பது சிரமமாக உள்ளது. பஸ்சில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகமாகி வருகிறது.
முதலிபாளையத்தில் துவங்கி, விஜயாபுரம் பள்ளி ஸ்டாப் சென்று, மத்திய பஸ் ஸ்டாண்ட் திரும்பும் வகையில் காலை, மாலை வேளையில் கூடுதல் டவுன் பஸ்களை இயக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

