/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மூலப்பொருள் ஜி.எஸ்.டி. குறைக்கப்படுமா? பாத்திர உற்பத்தியாளர் எதிர்பார்ப்பு
/
மூலப்பொருள் ஜி.எஸ்.டி. குறைக்கப்படுமா? பாத்திர உற்பத்தியாளர் எதிர்பார்ப்பு
மூலப்பொருள் ஜி.எஸ்.டி. குறைக்கப்படுமா? பாத்திர உற்பத்தியாளர் எதிர்பார்ப்பு
மூலப்பொருள் ஜி.எஸ்.டி. குறைக்கப்படுமா? பாத்திர உற்பத்தியாளர் எதிர்பார்ப்பு
ADDED : அக் 30, 2025 12:42 AM

அனுப்பர்பாளையம்: ''மூலப்பொருட்கள் கொள்முதலுக்கான ஜி.எஸ்.டி.யை, பாத்திர விற்பனைக்கு உள்ளதைப்போன்று ஐந்து சதவீதமாக குறைக்க வேண்டும்'' என்று திருப்பூர் எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர் சங்க மகாசபை கேட்டுக்கொண்டுள்ளது.
திருப்பூர் எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர்கள் சங்க மகாசபை கூட்டம்,15 வேலம்பாளையம் பிளேக் மாரியம்மன் கோவில் மண்டபத்தில் நடந்தது. தலைவர் துரைசாமி தலைமை தாங்கினார்.
பாத்திர உற்பத்திக்கு தேவையான மின் கட்டணத்தை மானிய விலையில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜி.எஸ்.டி. விதிப்பில், மூலப்பொருட்கள் கொள்முதலுக்கு 18 சதவீதத்தில் இருந்து, பாத்திர விற்பனைக்கு உள்ளது போல், 5 சதவீதமாக குறைக்க வேண்டும்.
நலிந்து வரும் பாத்திர தொழிலை மேம்படுத்த தொழில் பயிற்சி கூடம் அமைக்க அரசு முன் வர வேண்டும்.
பாத்திர தயாரிப்பு தொழிலில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். பாத்திர உற்பத்திக்கு தேவையான மூல பொருட்களை அரசே முன் வந்து பட்டறைதாரர்களுக்கு மலிவு விலையில் வழங்க வேண்டும் என்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
புதிய நிர்வாகிகள் தேர்வு முன்னதாக, சங்க தலைவராக துரைசாமி, செயலாளராக தர்மமூர்த்தி, பொருளாளராக ராஜேந்திரன், துணை தலைவராக குமாரசாமி, துணை செயலாளராக மதிவாணன், ஆகியோர் புதிய நிர்வாகிகளாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

