/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீ பாலசாஸ்தா ஐயப்பன் கோவில் யாகசாலைக்கு முகூர்த்தக்கால் பூஜை
/
ஸ்ரீ பாலசாஸ்தா ஐயப்பன் கோவில் யாகசாலைக்கு முகூர்த்தக்கால் பூஜை
ஸ்ரீ பாலசாஸ்தா ஐயப்பன் கோவில் யாகசாலைக்கு முகூர்த்தக்கால் பூஜை
ஸ்ரீ பாலசாஸ்தா ஐயப்பன் கோவில் யாகசாலைக்கு முகூர்த்தக்கால் பூஜை
ADDED : நவ 10, 2024 04:35 AM

அவிநாசி : அவிநாசி அருகே சேவூரிலுள்ள ஸ்ரீ பால சாஸ்தா ஐயப்பன் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை அமைக்க முகூர்த்தக்கால் நடப்பட்டது.
கோவிலில், ஸ்ரீ பால சாஸ்தா ஐயப்பன் மற்றும் தனி சன்னதியில் ஸ்ரீ கணபதி, ஸ்ரீ சிவன், ஸ்ரீ குருவாயூரப்பன், உள்ளிட்ட பரிவார மூர்த்திகளான ஸ்ரீமாளிகைபுரத்தம்மன், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ நாக தேவதைகள், ஸ்ரீ நவகிரகங்கள் ஆகியவற்றுக்கு திருப்பணி நிறைவுற்றது. அதன் தொடர்ச்சியாக, வரும், 20ம் தேதி அதிகாலை 4.45 மணிக்கு மேல் 5.45 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை அமைக்க முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். கும்பாபிஷேகத்துக்காக, பாபநாசம் அருகிலுள்ள சொரிமுத்து அய்யனார் கோவிலில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வர உள்ளனர். அதற்காக இன்று இரவு ஐயப்பன் கோவிலில் இருந்து புறப்படுகின்றனர். கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.