ADDED : செப் 17, 2025 11:59 PM

அவிநாசி; அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்டில், 6 கோடி ரூபாய் மதிப்பிலான வணிக வளாகம் கட்டி பல மாதங்களாக பயன்பாடின்றி உள்ளது. இதேபோல, 2.80 கோடி ரூபாய் மதிப்பில் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் கட்டப்பட்டு, பல மாதங்கள் திறக்கப்படாமல் உள்ளது. செம்பியநல்லுாரில், 6 கோடி ரூபாய் மதிப்பில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான தங்கும் விடுதி, 60 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட வீடற்றவர்கள் தங்கும் விடுதி ஆகியவை திறக்கப்படாமல் உள்ளது.
இவற்றை உடனடியாக திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அளிக்க வேண்டும். கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய பகுதிகளில் இருந்து வரும் பஸ்கள் முறையாக அவிநாசி பஸ் ஸ்டாண்ட் வராமல் பைபாஸில் செல்கிறது. இதனை முறைப்படுத்தி அவிநாசி பழைய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்ட் ஆகியவற்றில் பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி மா.கம்யூ., சார்பில், புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய குழு உறுப்பினர் வேலுசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் நந்தகோபால், ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, சி.ஐ.டி.யு. மாநில குழு உறுப்பினர் முத்துசாமி, மாவட்ட குழு உறுப்பினர் பழனிசாமி உட்பட பலர் பங்கேற்று, கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.