/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அடிப்படை வசதி கோரிக்கை மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
/
அடிப்படை வசதி கோரிக்கை மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
ADDED : மே 16, 2025 12:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம், ;அனுப்பர்பாளையம் புதுார் மா.கம்யூ கட்சி சார்பில், பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் கருப்பராயன் கோவில் வீதியில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மா.கம்யூ., கிளை செயலாளர் விஸ்வநாதன், தலைமை வகித்தார். நகர் செயலாளர் நந்தகோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரங்கராஜ், ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். பெண்கள் உள்பட நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், அனுப்பர்பாளையம் புதுாரில் கான்கிரீட் சாலை, கான்கிரீட் பாலம் மற்றும் சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும். குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.