/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
படகு இல்லத்தில் சவாரி கட்டணம் குறைக்க மா.கம்யூ., வலியுறுத்தல்
/
படகு இல்லத்தில் சவாரி கட்டணம் குறைக்க மா.கம்யூ., வலியுறுத்தல்
படகு இல்லத்தில் சவாரி கட்டணம் குறைக்க மா.கம்யூ., வலியுறுத்தல்
படகு இல்லத்தில் சவாரி கட்டணம் குறைக்க மா.கம்யூ., வலியுறுத்தல்
ADDED : ஜன 23, 2025 12:22 AM
திருப்பூர்; ஆண்டிபாளையம் குளத்தில் படகு சவாரி கட்டணத்தை பாதியாக குறைக்கவேண்டும் என, மா.கம்யூ., வலியுறுத்து கிறது.
அக்கட்சியின் மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன் அறிக்கை:
ஆண்டிபாளையம் குளத்தில் படகு இல்லம் அமைக்கப்பட்டு, படகு சவாரி துவங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தகக்கது.
மோட்டார் படகில் 20 நிமிட பயணத்துக்கு 100 ரூபாய்; 4 இருக்கை பெடல் படகு மற்றும் 5 இருக்கை துடுப்பு படகுகளில், 20 நிமிட பயணத்துக்கு 100 ரூபாய்; இரண்டு இருக்கை பெடல் படகில் 30 நிமிட சவாரிக்கு 150 ரூபாய் வீதம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாதளங்களைவிட இங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
நான்குபேர் கொண்ட ஒரு குடும்பத்தினர் படகு சவாரி செய்வதற்கு, குறைந்தபட்சம் 400 ரூபாய் செலவிட வேண்டியுள்ளது. பார்க்கிங் கட்டணத்தையும் சேர்த்து, மொத்தம் 500 ரூபாய் செலவிட வேண்டும்.
வேறு பொழுதுபோக்கு அம்சங்களே இல்லாதநிலையில், படகு இல்லத்துக்கு ஆர்வமுடன் வரும் மக்களுக்கு, படகு சவாரிக்கு அதிக கட்டணம் வசூலிப்பது பெரும் சுமையாகிறது. எனவே, தொழிலாளர் நிறைந்த, திருப்பூரில், படகு சவாரிக்கான கட்டணத்தை பாதியாக குறைக்க வேண்டும்.
படகு இல்லத்துக்கு மக்கள் வந்து செல்ல ஏதுவாக, மங்கலம் ரோடு வழியாக சிறப்பு பஸ்கள் இயக்கவேண்டும்; ஆண்டிபாளையம் குளம் அருகே பஸ் நிறுத்தம் ஏற்படுத்த வேண்டும். சுற்றுலாதளங்களின் பட்டியலில், படகு இல்லத்தை இணைத்து, மாவட்ட நிர்வாக இணையதளம் உள்ளிட்டவற்றில் விளம்பரப்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.