/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாயமான சிறுவன் காட்டில் சடலமாக மீட்பு
/
மாயமான சிறுவன் காட்டில் சடலமாக மீட்பு
ADDED : நவ 09, 2024 10:49 PM

பல்லடம்:ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சுந்தர் கோச்சா, 42. மனைவி பிலா கோச்சா, 36. இவர்கள் மகன் கணேஷ், 5. திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே காரணம்பேட்டையில் குடும்பத்துடன் வசிக்கின்றனர். அருகில் மில் ஒன்றில் தம்பதியர் வேலை பார்க்கின்றனர். நேற்று முன்தினம் மாலை, வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த கணேஷ், திடீரென மாயமானார்.
இது குறித்து, பிலா கோச்சா, பல்லடம் போலீசில் புகார் தெரிவித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுவனை தேடினர். நேற்று காலை, வீட்டுக்கு அருகிலுள்ள காட்டுப்பகுதியில், சிறுவன் சடலமாக கிடந்தார். அப்பகுதியினர் அளித்த தகவலில், பல்லடம் போலீசார் சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
நேற்று முன்தினம் காணாமல் போன சிறுவன், உடலில் காயங்கள் எதுவும் இல்லாத நிலையில், காட்டுப்பகுதியில் இறந்து கிடந்துள்ளார். கொலை செய்யப்பட்டு, காட்டுப்பகுதியில் வீசப்பட்டாரா அல்லது விஷ ஜந்துக்கள் ஏதேனும் கடித்து உயிரிழந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.