/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசிய கிரிக்கெட் போட்டி; அவிநாசி மாணவர் தேர்வு
/
தேசிய கிரிக்கெட் போட்டி; அவிநாசி மாணவர் தேர்வு
ADDED : நவ 17, 2025 01:26 AM

அவிநாசி: அவிநாசி அணைப்புதுார், டீ பப்ளிக் பள்ளியில், இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் சார்பில் 14 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடந்தது.
இதில் மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள், தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்பதற்கான தேர்வு நடந்தது.
அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் கைகாட்டிபுதுார் பகுதியைச் சேர்ந்த ராகேஷ் என்ற மாணவர் பங்கேற்றார்.
வரும் ஜனவரி 19 முதல் 24 வரை ராஜஸ்தானில் நடைபெற உள்ள தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றார்.
நேற்று மாணவருக்கு, தேசிய அளவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு துறை அலுவலர், அரசு ஆண்கள் பள்ளி தலைமையாசிரியர் இந்துமதி, உடற்கல்வி ஆசிரியர் கவிதா உள்ளிட்டோர் பங்கேற்று மாணவரை வாழ்த்தினர்.

