/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'சிக்கன் ரைஸ் ஏன் லேட்?' ஓட்டலை சூறையாடிய கஞ்சா கும்பல்
/
'சிக்கன் ரைஸ் ஏன் லேட்?' ஓட்டலை சூறையாடிய கஞ்சா கும்பல்
'சிக்கன் ரைஸ் ஏன் லேட்?' ஓட்டலை சூறையாடிய கஞ்சா கும்பல்
'சிக்கன் ரைஸ் ஏன் லேட்?' ஓட்டலை சூறையாடிய கஞ்சா கும்பல்
ADDED : நவ 17, 2025 01:26 AM

திருப்பூர்: திருப்பூர் பல்லடம் ரோடு வீரபாண்டியை சேர்ந்தவர் பாலு, 50. அப்பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார்.
நேற்று மாலை, ஓட்டலுக்கு, பலவஞ்சிபாளையத்தை சேர்ந்த கவுதம், 25 என்பவர் போதையில் வந்தார். இரண்டு புரோட்டாவை ஆர்டர் செய்து சாப்பிட்டார். தொடர்ந்து சிக்கன் ரைஸ் ஆர்டர் செய்தார். வர தாமதம் ஏற்பட்டது.
கடையில் இருந்த கணக்காளர் ஜாகீர், 40, மாஸ்டர் பாண்டி, 50 ஆகியோரிடம் தகராறு செய்தார். 'புரோட்டாவுக்கு மட்டும் பணம் கொடுத்தால் போதும், சிக்கன் ரைஸிற்கு பணம் வேண்டாம்' என கூறினர்.
கவுதம், நண்பர்களுக்கு அளித்த தகவலின் பேரில், பத்து பேர் கொண்ட கும்பல் கடைக்கு வந்தது. கணக்காளர் ஜாகீரை தாக்கி மண்டையை உடைத்தனர். உள்ளே இருந்த பொருட்கள், கண்ணாடியை உடைத்தனர். சாப்பிட அமர்ந்திருந்த குழந்தை மீது, சேர் பட்டது. கடையை சூறையாடிய கும்பலை, சுற்றியிருந்த பொதுமக்கள் பிடிக்க முயன்றனர். ஏழு பேர் தப்பி சென்ற நிலையில், மூன்று பேர் பிடிபட்டனர். விசாரிக்கும் போது, இருவர் தப்பினர். கவுதமை பிடித்து, வீரபாண்டி ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.
தகராறில் ஈடுபட்ட வாலிபரை வீரபாண்டி போலீசில் ஒப்படைத்தனர். அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வியாபாரிகள், அரசியல் கட்சியினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த நபரிடம் விசாரிக்க முயன்ற போது, வாலிபர் கஞ்சா போதையில் இருப்பது தெரிந்தது.
விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து, உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசாரிடம் வாக்குவாதம் செய்து, போலீசாரை திக்குமுக்காட வைத்து விட்டார்.
கடையை சூறையாடிய நபர்களை கைது செய்து, வாலிபர் மீது குண்டாஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர்.

