/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'வந்தே மாதரம்' பாடல்; மாணவர்கள் ஆர்வம்
/
'வந்தே மாதரம்' பாடல்; மாணவர்கள் ஆர்வம்
ADDED : நவ 17, 2025 01:27 AM

திருப்பூர்: 'வந்தே மாதரம்' பாடலின் 150வது ஆண்டு விழாவையொட்டி, தேசிய சிந்தனைப் பேரவை, திருக்கோவில் திருத்தொண்டர் அறக்கட்டளை, சங்கீதகலா பீடம் இசைப்பள்ளிகள் குழுமம் சார்பில், 'வந்தேமாதரம்' பாடல் ஒப்புவித்தல் போட்டி நேற்று சங்கீதா கலா பீடத்தில் நடந்தது.
தேசிய சிந்தனைப் பேரவையின் மாநில அமைப்பாளர் சேக்கிழான் தலைமை வகித்தார். ஜவஹர் குழந்தைகள் மன்ற ஆசிரியர்கள் ஸ்ரீதர், பொன் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருக்கோவில் திருத்தொண்டர் அறக்கட்டளை அமைப்பாளர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். சங்கீதகலா பீடம் இசைப்பள்ளிகளின் நிறுவனர் ஸ்ரீராம், ஆசிரியை காயத்ரி ஆகியோர் நடுவர்களாகச் செயல்பட்டனர்.
6 வயது முதல் 16 வயது வரையுள்ள குழந்தைகள் 63 பேர் 3 பிரிவுகளில் கலந்துகொண்டனர். இதில் 6 - - 9 வயதுப்பிரிவில், தர்ஷிகா தாரணி முதலிடம், லோகிதா இரண்டாமிடம், காவ்யா தர்ஷினி மூன்றாமிடம்; 10 - - 12 வயதுப்பிரிவில், திவிஷா முதலிடம், சரண்யா இரண்டாமிடம், தீக்ஷா; 13 -- 16 வயதுப்பிரிவில், யுவஸ்ரீ முதலிடம், ஜெய்ஸ்ரீ இரண்டாமிடம், அஸ்விகா மூன்றாமிடம் பெற்றனர்.
முதல் மூன்று இடங்களுக்கு பாராட்டுச் சான்றிதழுடன், சுவாமி விவேகானந்தரின் மனிதவள மேம்பாட்டு நுால்கள் வழங்கப்பட்டன. பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழுடன் சுவாமி விவேகானந்தரின் தன்னம்பிக்கை வளர்க்கும் நுால்களும் வழங்கப்பட்டது.
திருப்பூர், ஆல் வின்னர் ஏஞ்சல் டுட்டோரியல் கல்லுாரி முதல்வர் தங்கராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார்.

