/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசிய ஒருமைப்பாடு முகாம்; அரசுக்கல்லுாரி மாணவி தேர்வு
/
தேசிய ஒருமைப்பாடு முகாம்; அரசுக்கல்லுாரி மாணவி தேர்வு
தேசிய ஒருமைப்பாடு முகாம்; அரசுக்கல்லுாரி மாணவி தேர்வு
தேசிய ஒருமைப்பாடு முகாம்; அரசுக்கல்லுாரி மாணவி தேர்வு
ADDED : செப் 18, 2025 12:11 AM

திருப்பூர்; மாநில இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு என்.எஸ்.எஸ்., திட்டம் சார்பில், தேசிய ஒருமைப்பாடு முகாம், 18ம் தேதி முதல், 24ம் தேதி வரை, தஞ்சாவூரில் உள்ள தமிழ் பல்கலையில் நடைபெற இருக்கிறது.
தமிழகம், ஒடிசா, மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, உத்ரகாண்ட், தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து, 22 பேர் பங்கேற்க உள்ளனர். தமிழகம் சார்பில், கோவை பாரதியார் பல்கலை மாணவர்கள், 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதில், திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி என்.எஸ்எஸ்., திட்டம் அலகு 2 சேர்ந்த பொருளியல் பாடப்பிரிவு மாணவி, சரண்யா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரை, பாரதியார் பல்கலை என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, அலகு 2 அலுவலர் மோகன்குமார், கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.