/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசிய விளையாட்டு தினம் குழந்தைகள் தடகள போட்டி
/
தேசிய விளையாட்டு தினம் குழந்தைகள் தடகள போட்டி
ADDED : ஆக 29, 2025 09:32 PM
உடுமலை, ;திருப்பூர் மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில், குழந்தைகளுக்கான தடகளப்போட்டிகள் இன்று நடக்கிறது.
தேசிய விளையாட்டு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு இடங்களில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
திருப்பூர் மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில், மாவட்ட அளவில் குழந்தைகளுக்கான தடகளப்போட்டிகள் இன்று நடக்கிறது.
உடுமலை அரசு கலைக்கல்லுாரி மைதானத்தில் காலை, 8:45 மணிக்கு போட்டிகள் துவங்குகிறது. உடுமலை கிழக்கு அரிமா சங்கம் உட்பட பல்வேறு தன்னார்வல அமைப்புகள் இணைந்து போட்டியை நடத்துகிறது. முன்னாள் தடகள வீரர்கள், பேராசிரியர்கள், கல்லுாரி நிர்வாகத்தினர் துவக்க விழாவில் பங்கேற்கின்றனர். ஆர்வமுள்ள குழந்தைகள் இந்த தடகள போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.

