/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இயற்கை உணவு விழிப்புணர்வு முகாம்
/
இயற்கை உணவு விழிப்புணர்வு முகாம்
ADDED : நவ 24, 2025 06:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், 'உணவே மருந்து; பாரம்பரியம் காப்போம்,' என்ற தலைப்பிலான முகாமில், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மாதமும், நான்காவது சனிக்கிழமையன்று இம்முகாம் நடத்தப்படுகிறது. முகாமில், சர்க்கரை அளவு, ஹீமோகுளோபின், ரத்த அழுத்தம் பரிசோதித்து, அதற்கான ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.
குறிப்பாக இயற்கையான உணவு வகைகள், அதன் முக்கியத்துவம் குறித்து விளக்கமளிக்கின்றனர். இந்த முகாம் உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவில் நிர்வாகம், உடுமலை லேப் மற்றும் வாளவாடி லயன்ஸ் சங்கத்தின் சார்பில் நடத்தப்படுகிறது.

