/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆர்.ஜி., மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா; வரையாடு பாதுகாப்பு விழிப்புணர்வு

ADDED : நவ 24, 2025 06:01 AM

உடுமலை: உடுமலை ஆர்.ஜி., மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியின் 39வது ஆண்டு விழா, மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சியுடன் சிறப்பாக நடைபெற்றது.
பள்ளி என்.சி.சி., மாணவர்கள், அணிவகுப்பு நடத்தி பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றனர். பள்ளிச்செயலாளர் நந்தினி விழாவை துவக்கி வைத்தார்.
பள்ளித்தாளாளர் ரவீந்திரன், கடந்த கல்வியாண்டின் சிறப்பான சாதனைகள் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசினார். முன்னாள் எம்.பி., சண்முகசுந்தரம் மாணவர்களை ஊக்கப்படுத்தி பேசினார். ஆண்டறிக்கையை பள்ளி முதல்வர் சகுந்தலா வாசித்தார்.
கலை மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பள்ளி அறங்காவலர் சம்ஹிதா பரிசுகளை வழங்கினார்.
நீலகிரி வரையாடுகள் பாதுகாப்பை முன்னிறுத்தி மாணவ, மாணவியர் நடத்திய விழிப்புணர்வு நடனம் அனைவரின் கவனம் ஈர்த்தது. பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.