/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காய்கறி கழிவில் இயற்கை எரிவாயு; பள்ளிகளிலும் செயல்படுத்தலாமே!
/
காய்கறி கழிவில் இயற்கை எரிவாயு; பள்ளிகளிலும் செயல்படுத்தலாமே!
காய்கறி கழிவில் இயற்கை எரிவாயு; பள்ளிகளிலும் செயல்படுத்தலாமே!
காய்கறி கழிவில் இயற்கை எரிவாயு; பள்ளிகளிலும் செயல்படுத்தலாமே!
ADDED : செப் 12, 2025 10:48 PM

பல்லடம்; காய்கறி கழிவுகளில் இருந்து இயற்கை எரிவாயு தயாரிக்கும் திட்டத்தை, பள்ளிகளிலும் செயல் படுத்த அரசு முயற்சிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பல்லடம் அரசு மருத்துவமனையில், தினசரி சேகரமாகும் காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவு கழிவுகளை பயன்படுத்தி, இயற்கை எரிவாயு தயாரிக்கும் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் 'கோ பரதன்' திட்டத்தின் உதவியுடன், 35 ஆயிரம் ரூபாய் செலவில், இயற்கை எரிவாயு தயாரிப்பதற்கான உபகரணங்கள் அமைக்கப்பட்டன. தினசரி சேகரமாகும், 5 கிலோ காய்கறி கழிவுகளை பயன்படுத்தி கிடைக்கும் இயற்கை எரிவாயு, ஒன்றரை மணி நேரம் மருத்துவமனை சமையலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு, மருத்துவ மனையில் கிடைக்கும், 5 கிலோ கழிவுகளை பயன்படுத்தி, இயற்கை எரிவாயு தயாரிக்க முடியும் என்றால், ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் படிக்கும் பள்ளிகளில் இதனை செயல்படுத்தினால், சுயமாக தயாரிக்கப்படும் இயற்கை எரிவாயுவை அந்தந்த பள்ளிகளே பயன்படுத்திக் கொள்ள முடியும். மத்திய அரசின் திட்டத்தை பயன்படுத்தி, ஒவ்வொரு பள்ளிகளிலும், கிடைக்கும் காய்கறி மற்றும் உணவு கழிவுகளை சேகரித்து அதற்கேற்ப கட்டமைப்பை உருவாக்கி, இயற்கை எரிவாயு தயாரிப்பதன் வாயிலாக செலவுகள் குறைவதுடன், கழிவுகளையும் முறையாக பயன்படுத்த முடியும். தமிழக அரசு, பள்ளிக்கல்வித்துறை, இது குறித்து ஆலோசித்து, இயற்கை எரிவாயு தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த முன் வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.