/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இயற்கை பாதுகாப்பு நாள்; மாணவருக்கு விழிப்புணர்வு
/
இயற்கை பாதுகாப்பு நாள்; மாணவருக்கு விழிப்புணர்வு
ADDED : ஜூலை 28, 2025 10:46 PM
திருப்பூர்; உலக இயற்கை பாதுகாப்பு நாள், ஆண்டுதோறும் ஜூலை 28ம் தேதி பின்பற்றப்படுகிறது.
இந்நாளில், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் அவசியம் வலியுறுத்தியும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு 'மக்களையும் தாவரங்களையும் இணைத்தல் - வனவிலங்கு பாதுகாப்பில் டிஜிட்டல் புதுமைகளை ஆராய்தல்' என்ற கருப்பொருளுடன் உலகம் முழுவதும் இயற்கை பாதுகாப்பு நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
திருப்பூர் மாவட்டத்தில் கவுசிகா நதிக்கரையில் நடைபெற்றது. 'நேச்சர் அண்ட் ஸ்பேஸ் அவேர்னஸ் ஆர்கனைஷேசன்' அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்வில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பறவைகளின் முக்கியத்துவம், சுற்றுச்சூழலை சீரழிக்கும் பாலிதீன் குறித்த கலந்துரையாடல் நடந்தது.
பின் அங்குள்ள பறவைகளை பைனாகுலர் மூலம் மாணவர்கள் பார்த்து ரசித்தனர். பறவைகளைப் பற்றியும், பறவைகள் சந்தித்து வரும் ஆபத்துகள் பற்றியும், சுற்றுச்சூழலில் பறவைகளின் பங்கு குறித்தும் கீதா மணி விளக்கினார். காலநிலை மாற்றத்தால் உலகம் சந்தித்து வரும் சமகால பிரச்னை குறித்தும், அவற்றை சரி செய்யும் முறைகள் குறித்தும் முருகவேல் மற்றும் கிருஷ்ணராஜ் ஆகியோர் விளக்கினர்.