/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுரங்கப்பாதையில் மின்விளக்கு தேவை
/
சுரங்கப்பாதையில் மின்விளக்கு தேவை
ADDED : மே 30, 2025 11:46 PM
உடுமலை; உடுமலை பெரியார் நகர் சுரங்கப்பாதையில் மின்விளக்கு வசதி செய்து தர வேண்டும் என, நகராட்சிக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை தெற்கு பகுதியிலுள்ள பழனியாண்டவர் நகர் பகுதிக்கு செல்ல பெரியார் நகரில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதை முக்கிய வழித்தடமாக உள்ளது.
இப்பாதையில் மழைநீர் செல்ல வழியில்லாமல் தேங்கியுள்ளது. மேலும் இரவு நேரங்களில் மின் விளக்குகள் இல்லாததல், இருளில் மூழ்கி விடுகிறது. இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.
அப்பகுதியில் விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, உடுமலை நகராட்சி நிர்வாகத்தினர், சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றவும், மின்விளக்குகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.