/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அபாய மின் கம்பத்தை மாற்றாமல் அலட்சியம்
/
அபாய மின் கம்பத்தை மாற்றாமல் அலட்சியம்
ADDED : டிச 08, 2025 05:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: மங்கலம் ஊராட்சி, அக்ரஹாரப்புத்துார் மின் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்டது வசந்தம் நகர்; இங்கிருந்த மின்கம்பங்கள் மாற்றப்பட்டன.
உயரம் குறைவாக உள்ள, பழைய மின்கம்பம் மட்டும் மாற்றப்படாமல் இருக்கிறது. கம்பம் முழுவதும் சேதமாகி, சிமென்ட் பெயர்ந்து நிற்கிறது. எந்நேரமும், இரண்டாக பிளந்து விழும் என்ற அச்சம் நிலவுகிறது. மின் பணியாளர் மின்கம்பத்தில் ஏறி பழுதுநீக்க முடிவதில்லை.
தெருவிளக்கும், குறைவான உயரத்தில் பொருத்தப்பட்டுள்ளது. உடனடியாக மின் கம்பத்தை மாற்ற வேண்டும்.

