/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தண்ணீர் தேங்காத புதிய தடுப்பணைகள்; பணிகளில் மாற்றம் அவசியம்
/
தண்ணீர் தேங்காத புதிய தடுப்பணைகள்; பணிகளில் மாற்றம் அவசியம்
தண்ணீர் தேங்காத புதிய தடுப்பணைகள்; பணிகளில் மாற்றம் அவசியம்
தண்ணீர் தேங்காத புதிய தடுப்பணைகள்; பணிகளில் மாற்றம் அவசியம்
ADDED : செப் 19, 2024 09:56 PM

உடுமலை: மழை நீர் ஓடைகளின் குறுக்கே புதிதாக கட்டப்படும் தடுப்பணைகளில், கூடுதலாக நீர் தேங்கும் வகையில் பணிகளை மேற்கொள்ள, உடுமலை வட்டார விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை சுற்றுப்பகுதிகளில், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த, மழை நீர் ஓடைகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட, மத்திய, மாநில அரசு திட்டங்களின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
குறிப்பாக, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், பல கோடி ரூபாய், தடுப்பணை திட்ட பணிகளுக்கு ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்கின்றனர்.
ஆனால், இடம் தேர்வு, திட்டமிடல் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால், பல தடுப்பணைகளில் தண்ணீர் தேங்குவதில்லை.
அரசு இலக்கு நிர்ணயிப்பதால், அவசர கதியில், இடம் தேர்வு செய்து பணிகளை மேற்கொள்கின்றனர். மேலும், தடுப்பணையின் தண்ணீர் தேங்கும் பரப்பை ஆழப்படுத்துவது, கரைகளை வலுப்படுத்துவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை.
இதனால், மழைக்காலங்களில், ஓடையில் நீரோட்டம் இருந்தாலும், சில அடி உயரத்துக்கு கூட தண்ணீர் தேங்குவதில்லை. தடுப்பணை ஒட்டியுள்ள மண் கரையும் எளிதாக அரிக்கப்பட்டு, ஓடையில் நீரோட்டமும் பாதிக்கிறது.
முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்தில், தடுப்பணைகள் கட்ட, இடம் தேர்வு செய்யும் போது, பொதுப்பணித்துறை உள்ளிட்ட நிபுணர்கள் ஆலோசனைகளை பெற்று ஊரக வளர்ச்சித்துறையினர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இல்லாவிட்டால், ஓடைகளின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணைகளில், தண்ணீர் தேங்காமல், நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்கவும், உயர்த்தவும், அரசு ஒதுக்கீடு செய்யும் நிதி அனைத்து வீணாகும் அவலம் ஏற்படும். வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை காலங்களில், அரிதாக கிடைக்கும் மழை நீரையும் சேகரிக்க முடியாது.