/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்டத்தில் புதிய அருங்காட்சியகம் அமைகிறது
/
மாவட்டத்தில் புதிய அருங்காட்சியகம் அமைகிறது
ADDED : செப் 01, 2025 07:23 PM
உடுமலை:
மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் குறைவுதான். மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை மேம்படுத்தினால், சுற்றுலா ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சி தரும்.
திருப்பூர் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டுக்குழு ஆய்வுக்கூட்டம், மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்தது. மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த்குமார் வரவேற்றார்.
இதில், மாவட்டத்தில் சுற்றுலாவை மேம் படுத்துவது குறித்து, பல்வேறு ஆலோசனைகள் நடந்தன.
சின்னார் - கூட்டாறு வரை மலையேற்ற (ட்ரெக்கிங்) சுற்றுலாவை பிரபலப்படுத்துவது, அமராவதி அணை பூங்காவை சீரமைப்பது, அமராவதி முதலைப்பண்ணை சுற்றுலா வளர்ச்சித்திட்டம், திருமூர்த்தி மலையில் புதிய பூங்கா அமைத்தல், திருமூர்த்தி மலையில், செயல்படாமல் இருக்கும் படகு இல்லத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருதல், மாவட்டத்தில் புதிய அருங்காட்சியகம் அமைத்தல், தகவல் சுற்றுலா மையம் அமைத்தல், அனைத்து சுற்றுலா தலங்களையும் துாய்மையாக வைத்தல் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா வளர்ச்சித்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மாவட்ட வன அலுவலர் ராஜேஷ் உட்பட போலீஸ், மாநகராட்சி, நீர்வளத்துறை, ஹிந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள், சுற்றுலா தொழில் முனைவோர் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் பங்கேற்றனர்.